வெடி பொருட்களுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது

வெடி பொருட்களுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது

வெடி பொருட்களுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2014 | 3:52 pm

புத்தளம்  – அநுராதபுரம் பிரதான வீதியில் சி.டி.பி சந்தியில் வெடி பொருட்களுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பின் போது, இன்று அதிகாலை 05.30 அளவில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து  07 ஜெலட்னைட் குச்சிகளும், ஒரு தொகை வயர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

புத்தளம் ஆணமடுவ தோணிக்கல் பகுதியை சேர்ந்த இருவரும், கடுவலை பகுதியை சேர்ந்த ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கற்குவாரி ஒன்றில் பணியாற்றி வருபவர்கள் என்பது  ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்