பாராளுமன்ற அரசியலில் இருந்து ஓய்வு பெறுகின்றார் வி.ஆனந்த சங்கரி

பாராளுமன்ற அரசியலில் இருந்து ஓய்வு பெறுகின்றார் வி.ஆனந்த சங்கரி

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2014 | 2:25 pm

தமிழர் விடுதலை கூட்டணியன் செயலாளர் நாயகம் வி.ஆனந்த சங்கரி  பாராளுமன்ற அரசியலில்
இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தனது  81 ஆவது பிறந்த நாளான இன்று அவர் விடுத்துள்ள  அறிக்கையிலேயே இந்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.

எதிர் காலத்தில் நடக்க இருக்கும் எந்தவொரு தேர்தலிலும்  போட்டியிட போவதில்லை எனவும்
தமது எதிர்கால திட்டம் தொடர்பில் விரைவில் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாகவும்
வி.ஆனந்தசங்கரி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்