ஜீ -77 மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்

ஜீ -77 மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்

ஜீ -77 மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2014 | 7:54 am

பொலிவியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ , ஜீ- 77  மாநாட்டின் தலைவர்களுக்கான ஒன்றுகூடலில் கலந்துக் கொள்ளவுள்ளார்.

சிறந்த வாழ்வியலுக்காக புதிய உலக முறைமை என்ற தொனிப்பொருளில் இந்த   மாநாடு இடம்பெறுகின்றது.

ஜீ- 77   மாநாடு பொலிவியா நேரப்படி நேற்று மாலை 6.45 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டதாக ஜனாதிபதி பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் ஜோன் ஏஷ் உட்பட உயர் நிலை அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டுள்ளனர்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்றைய மாநாட்டில் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்..

1964 ஆம் ஆண்டில் அபிவிருத்தி அடைந்து வரும் 77 நாடுகளை ஒன்றிணைத்து ஸ்தாபித்த ஜீ- 77 அமைப்பில் தற்போது 133 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்