ஜி – 77 அரச தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்பு

ஜி – 77 அரச தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்பு

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2014 | 9:08 pm

 

அநாவசிய சர்வதேச அழுத்தங்கள் உள்ளிட்ட தடைகளை வெற்றிகொள்ள இலங்கையால் முடிந்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

நெம்பிய பிரதமரை பொலிவியாவில் சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

பொலிவியாவில் இடம்பெறும் ஜீ- 77  மாநாட்டில் கலந்துகொள்ள சென்றுள்ள ஜனாதிபதி அங்கு நெமீபிய பிரதமரை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது.

அண்மைகாலமாக சர்வதேசத்தின் தலையீடு நிலவிய நாடுகளின் நிலைமை முன்னரை விடவும் மோசமடைந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மோதல் நிறைவுக்கு வந்ததன் பின்னர் இலங்கை அடைந்துள்ள வெற்றிகள் தொடர்பாக ஜனாதிபதி  நெமீபிய பிரதமருக்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது

மக்கள் சமாதானத்துடனும் மகிழ்சியுடனும் வாழும் இந்த சந்தர்பத்தில் ஒரு சில அரசியல் வாதிகள் மற்றும்
நாட்டுக்கு எதிரான சக்திகளுமே மகிழ்ச்சியின்றி தவிப்பதாக ஜனாதிபதி சுட்டிகாட்டியுள்ளார்.

சிறந்த வாழ்வியலுக்காக புதிய உலக முறைமை என்ற தொனிப்பொருளில் ஜீ- 77 மாநாடு இம் முறை  இடம்பெறுகின்றது.

பொலிவியாவின் சென்டகுரூஸ் நகரின் எக்ஸ்போ குரூஸ் கேந்திர நிலையத்தில் இந்த மாநாடு இடம்பெறுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஐ.நாவின் பொது சபை தலைவர் ஜோன் ஏஷ்  மற்றும் பொலிவிய ஜனாதிபதி ஏவோ மொறலஸ் ஆகியோரின் தலைமையில் இந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றன.

ஜீ 77 அமைப்பில் 133 நாடுகளின் அரச தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடதக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்