கொட்டகலையில் வைத்திய அதிகாரிக்கு அமைச்சரினால் அச்சுறுத்தல்

கொட்டகலையில் வைத்திய அதிகாரிக்கு அமைச்சரினால் அச்சுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2014 | 3:22 pm

கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின்  சேவைகளிலிருந்து விலகுவதற்கு  அரச வைத்திய அதிகாரிகள்  சங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சர் ஒருவரினால் கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி ஜகத் அபேகுணரத்னவிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சங்கத்தின் ஊடகக்குழு உறுப்பினர் டொக்டர் சிதத் விஜேசேகர தெரிவித்தார்.

அச்சுறுத்தல் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரிக்கு எதிராக பிரதேச மக்களால் நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி உரிய முறையில் தனது பணியை முன்னெடுக்கவில்லை என தெரிவித்தே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்