காலி மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சி விற்பனைக்குத் தடை

காலி மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சி விற்பனைக்குத் தடை

காலி மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சி விற்பனைக்குத் தடை

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2014 | 6:02 pm

காலி மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாடு, பன்றி மற்றும் ஆடுகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லவும், அவற்றின் இறைச்சி வகைகளை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கால்நடைகளின் வாய் மற்றும் கால்களில் பரவிவரும் நோயை கட்டுப்படுத்தும் வகையில் இந்த தடை தற்காலிகமாக விதிக்கப்பட்டுள்ளதாக காலி மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் வெனுர கே.சிங்காரச்சி தெரிவித்துள்ளார்.

காலி மாவட்டத்தின் சில பகுதிகளில் கால்நடைகள் மத்தியில் இந்த நோய் துரிதமாக பரவி வருகின்றமை தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய காலி மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாடுகள், ஆடுகள் மற்றும் பன்றிகளை இறச்சிக்காக அறுக்கவும், வாகனங்களில் கொண்டுச் செல்லவும், இறைச்சி வகைகளை விற்பனை செய்யவும் இன்று முதல் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்