ஓட்டமாவடி பள்ளிவாசலில் கொள்ளை

ஓட்டமாவடி பள்ளிவாசலில் கொள்ளை

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2014 | 3:46 pm

மட்டக்களப்பு வாழைச்சேனை ஓட்டமாவடி பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பள்ளிவாசலின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளமை தொடர்பில் இன்று காலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டிற்கு அமைய வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்