இலங்கையில் மதச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தல்

இலங்கையில் மதச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2014 | 7:47 pm

இலங்கையில் சிறுபான்மை மக்களின் மதச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 25 ஆவது பேராளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் கூறினார்.

இதேவேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாட்டில்   11 முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன

ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கை சர்வதேச கடப்பாட்டினை நிறைவேற்ற வேண்டும் என தீர்மானமும் அதில் அடங்குகின்றது.

மாகாண சபைகளுக்கு பூரண அதிகாரங்களை வழங்குதல், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் புரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்துவது ஆகிய தீர்மானங்களையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிறைவெற்றியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்