இராமேஸ்வரம் மீனவர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு

இராமேஸ்வரம் மீனவர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2014 | 5:54 pm

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்கக் கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் மேற்கொண்டிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் விடுவிக்கப்பட வேண்டும் என தெரிவித்து இராமேஸ்வரத்தில் கடந்த ஒரு வாரகாலமாக மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

தமிழக மீனவர்கள் அனைவரும் இலங்கை நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்பிய நிலையிலும் இந்தப்பேராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளை நேற்று சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன், இராதாகிருஸ்ணன் இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.

இந்த உறுதிமொழியை அடுத்து இராமேஸ்வரம் மீனவர்கள் தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்றுடன் கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கமைய இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் ஒரு வாரத்திற்கு பின்னர் நாளை மீண்டும் கடற்றொழிலுக்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்