இந்தியாவில் கணவர் உட்பட 10 பேர் கொண்ட குழுவினால் பெண்ணொருவர் துஷ்பிரயோகம்

இந்தியாவில் கணவர் உட்பட 10 பேர் கொண்ட குழுவினால் பெண்ணொருவர் துஷ்பிரயோகம்

இந்தியாவில் கணவர் உட்பட 10 பேர் கொண்ட குழுவினால் பெண்ணொருவர் துஷ்பிரயோகம்

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2014 | 11:10 am

இந்தியாவில் பாலியல் வன்கொடுமைகள் அண்மைக்காலமாக பதிவாகியுள்ள நிலையில் மற்றுமொரு கொடூரமான வன்கொடுமை சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

மத்திய பிரதேஷில் உள்ள பிலாய் போர்கெடி ( Bhilai Borkhedi ) எனும் கிராமத்தில் பெண்ணொருவர் தமது கணவர் உள்ளிட்ட 9 பேர் அடங்கிய குழுவினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கணவரிடமிருந்து பிரிந்து வாழும் பெண்  மீண்டும் ஒன்றிணைந்து வாழ விரும்புவதாக தெரிவித்த கணவரிடம் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கணவரின் வீட்டிற்கு சென்ற பெண்ணை அறையொன்றுக்குள் பூட்டிய 10நபர்களும் அவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் நீருக்கு பதிலாக சிறுநீரை பருக வைத்து துன்புறுத்தியதாகவும் 10 பேர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த பெண்ணின் உடல்நிலை தேறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்