இங்கிலாந்தை வீழ்த்தியது  இத்தாலி

இங்கிலாந்தை வீழ்த்தியது இத்தாலி

இங்கிலாந்தை வீழ்த்தியது இத்தாலி

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2014 | 11:29 am

2014 உலக்கிண்ண  கால்பந்தாட்ட போட்டியில் லீக் போட்டிகள் சில  இன்று அதிகாலை நடைபெற்றன.

‘டி’ பிரிவு போட்டியில்  உருகுவே அணியும் கோஸ்ட்டரிக்கா அணியும் மோதின.

போட்டி ஆரம்பித்து 24வது நிமிடத்தில் பெனால்டி  மூலம்  கோலொன்றை போட  54வது நிமிடத்தில் கோஸ்ட்டரிக்கா வீரர் கேம்ப்பெல் அடித்த கோலால் இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையை எட்டின.

தொடர்ந்தும் இரண்டு கோல்களை அடித்த கோஸ்ட்டரிக்கா, ஆட்டத்தின் 85வது நிமிடத்தில் 3 க்கு ஒன்று  என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தியது. .

மற்றுமொரு போட்டி பெலோ ஹொரிசோண்ட்டில் உள்ள எஸ்ட்டாடியோ மினிரவ் மைதானத்தில் நடைபெற்றது.
.
‘சி’ பிரிவு போட்டியான இதில் கிரீஸ் அணியும் கொலம்பியா அணியும் மோதின.

போட்டியின் முதல் பாதிவரை  கொலம்பியா அணி மாத்திரமே  ஒரு கோல் அடித்திருந்தது.

இரண்டாம் பகுதியில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்திய  கொலம்பியா, மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் கிரீஸை வீழ்த்தியது.

16 ஆண்டுகளுக்கு பின்னர்  உலகக்கிண்ண  கால்பந்து போட்டியில் நுழைந்த  கொலம்பியா இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.

அத்துடன்  இன்று காலை நடைபெற்று முடிந்த மற்றுமொரு போட்டியில் இத்தாலியை எதிர்கொண்ட இங்கிலாந்து அணி 2 க்கு ஒன்று என்ற கணக்கில் தோல்வியடைந்தது,

மானஸ்ஹியில் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோலுடன் சமநிலையில் இருந்ததுடன் , போட்டியின் 50 ஆவது நிமிடத்தில் இத்தாலியின் மரியோ பலடோலி அடித்த கோல் மூலம் இத்தாலி 2 கோல்களை பெற்று வெற்றியீட்டியது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்