ஆப்கானிஸ்தான் ஜனாதிபதித் தேர்தலில் தலிகான்கள் தாக்குதல்; 46 பேர் பலி

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதித் தேர்தலில் தலிகான்கள் தாக்குதல்; 46 பேர் பலி

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதித் தேர்தலில் தலிகான்கள் தாக்குதல்; 46 பேர் பலி

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2014 | 10:37 am

ஆப்கானிஸ்தானில்  தமது எச்சரிக்கையை பொருட்படுத்தாது ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வாக்களித்ததை அடுத்து தலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஆப்கான் ஜனாதிபதி ஹமீட் கர்சாயின் பதவிக்காலம் முடிவடைவதால், அந்தப் பதவிக்கு முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அப்துல்லாவும், முன்னாள் உலக வங்கி அதிகாரி அஷ்ரஃப் கனியும் போட்டியிடுகின்றனர்.

தலிபான்களின் அச்சுறுத்தல்களையும் மீறி, சுமார் 7 மி்லலியன் மக்கள்  தமது ஜனநாயக கடமைகளை நிறைவேற்றினர்.

எனினும் தேர்தலுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தலிபான்  ஆயுததாரிகளால் 150 இடங்களில்  தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதுடன்  இதன் போது சுமார் 46 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன..

இதேவேளை, இந்த தேர்தலின் , முதல் கட்ட முடிவுகள்  அடுத்த மாதம் 2 ஆம் திகதியும், இறுதி முடிவு அடுத்த மாதம் 22 ஆம் திகதியும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்