அளுத்கம பொலிஸ் பிரிவில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

அளுத்கம பொலிஸ் பிரிவில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2014 | 7:13 pm

அளுத்கம பொலிஸ் பிரிவில் உடன் அமுலுக்கு வரும் வகையில்,  பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுதத்ப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சர் அஜித் ரோஹன தெரிவித்தார்

அளுத்கம பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள அமைதியின்மை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்

இன்று மாலை 6.45 முதல் அளுத்கம பொலிஸ் பிரிவில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் வீதிகளில் கூடுவதையும், வீதிகளில் நடந்துச் செல்வதையும் தவிர்துக்கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே அளுத்கம பொலிஸ் பிரிவிலுள்ள வீதிகளில்  கூடுவதையும், நடமாடுவதையும் தவிர்துக்கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்