விடுதலையான இந்திய மீனவர்கள் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவிடம் ஒப்படைப்பு

விடுதலையான இந்திய மீனவர்கள் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவிடம் ஒப்படைப்பு

விடுதலையான இந்திய மீனவர்கள் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவிடம் ஒப்படைப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2014 | 5:49 pm

ஊர்காவற்துறை நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட 36 தமிழக மீனவர்கள் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச கடற்பரப்பில் இன்று நண்பகல் கடற்படையினரால் இவர்கள் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை குறிப்பிட்டது.

ஜனாதிபதியின் உத்தரவின் கீழ், 36 தமிழக மீனவர்களும் நேற்று மாலை ஊர்காவற்துறை நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்.

எவ்வாறாயினும் மீனவர்களுடைய படகுகள் விடுவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மன்னார் நீதிமன்றத்தினால் இன்று பகல் விடுவிக்கப்பட்ட 46 தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கைக்கான இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் கடற்படையினர் மூலம் இவர்களை இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை விடுவிப்பது தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் 05 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்