மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் – சுகாதார அமைச்சு

மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் – சுகாதார அமைச்சு

மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் – சுகாதார அமைச்சு

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2014 | 2:49 pm

கொழும்பு உள்ளிட்ட சன நெரிசல்மிக்க பகுதிகளில் டெங்கு காய்ச்சல் துரிதமாக பரவிவருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 13,323 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சின் தொற்றுநோய் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்திலேயே அதிகளவானவர்கள் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு வடக்கு மற்றும் கொழும்பு கிழக்கிலேயே டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் அதிகம் உள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

கிருலப்பனையில் மாத்திரம் 14 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தற்போது 90 டெங்கு நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 23 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையிலுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜசிங்க குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்