பக்கிங்ஹம் மாளிகைக்கு தேயிலை அனுப்ப ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக நிதி மோசடி; சந்தேகநபருக்கு பிடியாணை

பக்கிங்ஹம் மாளிகைக்கு தேயிலை அனுப்ப ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக நிதி மோசடி; சந்தேகநபருக்கு பிடியாணை

பக்கிங்ஹம் மாளிகைக்கு தேயிலை அனுப்ப ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக நிதி மோசடி; சந்தேகநபருக்கு பிடியாணை

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2014 | 5:37 pm

பக்கிங்ஹம் மாளிகைக்கு தேயிலையை அனுப்புவதற்கு ஒப்பந்தம் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து, 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி மோசடி செய்த சந்தேகநபர் ஒருவரை கைதுசெய்வதற்கு இன்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த முறைப்பாடொன்றை ஆராய்ந்த கொழும்பு – கோட்டை நீதவான் திலினி கமகே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இந்திய பிரஜை ஒருவருக்கே இந்த ஒப்பந்தத்தை பெற்றுத் தருவதாகக் கூறி, சந்தேகநபர் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

ஆயினும், சந்தேகநபர் தற்போது கனடாவில் மறைந்திருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாட்டிலுள்ள விடயங்களை ஆராய்ந்ததன் பின்னர், கோட்டை நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்