ஈராக்கில் தொடர்ந்தும் மோதல்; 5 இலட்சம் மக்கள் வெளியேற்றம்

ஈராக்கில் தொடர்ந்தும் மோதல்; 5 இலட்சம் மக்கள் வெளியேற்றம்

ஈராக்கில் தொடர்ந்தும் மோதல்; 5 இலட்சம் மக்கள் வெளியேற்றம்

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2014 | 4:11 pm

ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மொசுலில் தொடர்ந்தும் மோதல்கள் இடம்பெறுவதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பபட்டுள்ளனர்.

சுமார் ஐந்து இலட்சம் மக்கள் நகரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

மொசுலிலுள்ள முக்கியமான அரச கட்டிடங்களை தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளதை அடுத்து அங்கு மோதல்கள் தொடர்கின்றன.

ஆயுததாரிகள் உள்ளூர் விமான நிலையத்தை கைப்பற்றியுள்ளதுடன்  ஆயிரக்கணக்கான கைதிகளை விடுவித்துள்ளதாகவும் ஈராக் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை ஆயுததாரிகள் நினேவே மாகாணம் முழுவதையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனையடுத்து நாட்டில் அவசர நிலைமைகளை பிரகடனப்படுத்துவதற்கான அதிகாரித்தை தமக்கு வழங்குமாறு அந்நாட்டு பிரதமர் நவூரி மலிகி பாராளுமன்றத்திடம் கோரியுள்ளார்.

ஈராக்கில் தொடரும் அமைதியின்மையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு உதவிகளை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்