இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் விடுதலை

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் விடுதலை

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் விடுதலை

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2014 | 2:35 pm

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 46 தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு மன்னார் நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த மீனவர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படடனர்.

இதன்போது அவர்களை விடுதலை செய்யுமாறு மன்னார் நீதவான் உத்தரவு பிறப்பித்ததாக கடற்றொழில் திணைக்களத்தின் மன்னார் மாவட்ட உதவிப் பிணப்பாளர் பி.எவ்.மிரிண்டா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் மீனவர்களுடைய படகுகள் விடுவிக்கப்படவில்லை என அவர் கூறினார்.

நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட 46 மீனவர்களையும் இந்திய துணைத் தூதராக அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாகவும் கடற்றொழில் திணைக்களத்தின் மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று விடுதலை செய்யப்பட்ட 36 தமிழக மீனவர்களும் ஏற்கனவே இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்