இந்தியாவுடன் இணைந்து செயற்படத் தயார்; மோடிக்கு நவாஸ் ஷெரீப் கடிதம்

இந்தியாவுடன் இணைந்து செயற்படத் தயார்; மோடிக்கு நவாஸ் ஷெரீப் கடிதம்

இந்தியாவுடன் இணைந்து செயற்படத் தயார்; மோடிக்கு நவாஸ் ஷெரீப் கடிதம்

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2014 | 4:36 pm

இந்தியாவுடன் நீண்டகாலமாக காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

அதன்பொருட்டு இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராகவுள்ளதாக இந்திய பிரதமர் மோடிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் நவாஸ் ஷெரீப் குறிப்பிட்டுள்ளார்.

மோடியுடனான சந்திப்பு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாகவும், இரு நாடுகளுக்கிடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வினை எட்டும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிராந்திய ஒத்துழைப்பு உட்பட பல விடயங்கள் தொடர்பில் இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதற்கும் பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் வாழும் மக்களின் நலன் முக்கியமானது எனவும், இரண்டு நாடுகளினதும் கூட்டு முயற்சியினால் மக்கள் நன்மையடைவார்கள் எனவும் பாகிஸ்தான் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தானுக்கும், இந்தியாவிற்கும் இடையில் நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை நிலவிவரும் நிலையில் நவாஸ் ஷெரீப்பின் இந்தக் கடிதம் இந்திய-பாகிஸ்தான் உறவுகளை புதுப்பிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்