இணை சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களின் சத்தியாக்கிரகம் கைவிடப்பட்டது

இணை சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களின் சத்தியாக்கிரகம் கைவிடப்பட்டது

இணை சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களின் சத்தியாக்கிரகம் கைவிடப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2014 | 2:55 pm

இணை சுகாதார விஞ்ஞான பீட மாணவர்கள் 170 நாட்களாக முன்னெடுத்த சத்தியாக்கிரக போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையம், காலி பஸ் தரிப்பிடம் மற்றும் பேராதனை கலஹா சந்தி ஆகிய இடங்களில் இந்த சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இணை சுகாதார விஞ்ஞான பட்டப்படிப்பு பாடத்திட்டத்திற்கு வழங்கப்படும் புள்ளியை 90 இலிருந்து 120 ஆக அதிகரிப்பதற்கு உயர் கல்வி அமைச்சு எழுத்துமூலம் உறுதியளித்ததைத் தொடர்ந்து இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் கைவிடப்பட்டதாக அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் நஜித் இந்திக்க குறிப்பிட்டார்.

இதேவேளை, இணை சுகாதார விஞ்ஞான பீட பட்டப்படிப்பு பாடத்திட்டத்தின் புதிய திருத்தங்கள் எழுத்து மூலம் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி பிரதியமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்