ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 24 மாணவர்கள் (அதிர்ச்சிக் காணொளி)

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 24 மாணவர்கள் (அதிர்ச்சிக் காணொளி)

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2014 | 3:50 pm

ஹிமாச்சல் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 24 மாணவ, மாணவியர் கதறும் காணொளி வெளியாகியுள்ளது.

ஆந்திரா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 50 பொறியியல் மாணவர்கள்  ஹிமாச்சல பிரசேத்தில் உள்ள மனாலிக்கு சுற்றுலா சென்றனர்.

அவர்கள் கடந்த ஞாயிறு மாலை மாண்டி மாவட்டம் குல்லு என்ற இடத்தில் பியாஸ் நதியில் மாணவர்கள் புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தனர்.

மாணவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கையில் லார்ஜி அணை  திறந்துவிடப்பட்டதால், ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 24 மாணவ, மாணவியர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாணவ, மாணவியர் அடித்துச் செல்லப்பட்டபோது அவர்கள் கதறுவது அந்த காணொளியில் பதிவாகியுள்ளது. கரையில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் தான் இந்த காணொளியை பதிவு செய்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்