அம்பாறை – கல்முனை தனியார் பஸ்களின் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

அம்பாறை – கல்முனை தனியார் பஸ்களின் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

அம்பாறை – கல்முனை தனியார் பஸ்களின் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2014 | 2:41 pm

அம்பாறை – கல்முனை தனியார் பஸ்களின் ஊழியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் கல்முனை – அக்கரைப்பற்று வீதியூடான பஸ் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபை பஸ் சாரதிக்கும் தனியார் பஸ் சாரதியொருவருக்கும் இடையே நேற்று மோதலொன்று ஏற்பட்டுள்ளது.

இதில் தனியார் பஸ் போக்குவரத்து சாரதி காயமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

இதனை கண்டிக்கும் வகையில் கல்முனை தனியார் பஸ்களின் ஊழியர்கள் இந்த பணிபகிஷ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த பகிஷ்கரிப்பு காரணமாக பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்