அனுஷ்காவிற்காக எந்த ஆபத்தையும் எதிர்கொள்ளத் தயார் – பீட்டர் ஹெய்ன்

அனுஷ்காவிற்காக எந்த ஆபத்தையும் எதிர்கொள்ளத் தயார் – பீட்டர் ஹெய்ன்

அனுஷ்காவிற்காக எந்த ஆபத்தையும் எதிர்கொள்ளத் தயார் – பீட்டர் ஹெய்ன்

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2014 | 11:41 am

இந்திய சினிமாவின் முன்னணி சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன். இவர் சிவாஜி, 7ஆம் அறிவு, கோ உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலியின் இயக்கத்தில் உருவாகி கொண்டிருக்கும் ‘பாகுபலி’ படத்திலும் சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றுகிறார். இதில் அனுஷ்காவிற்கும் பல சண்டைக்காட்சிகள் இருப்பதாக ராஜமவுலி முன்பே கூறியிருந்தார்.

இதுவரை நாயகர்களுக்காக மட்டும் ‘டூப்’ போட்ட பீட்டர், முதல்முறையாக நாயகி அனுஷ்காவிற்காக ‘டூப்’ போட்டதாகவும், மேலும் அனுஷ்காவிற்கு பல கஷ்டமான சண்டைக்காட்சிகளில் தான் நடித்துள்ளதாகவும், இந்த சண்டைக்காட்சிகளில் அனுஷ்கா உண்மையிலேயே நடித்திருந்தால் அவரது வாழ்வில் பல விபரீதங்கள் நடந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அனுஷ்கா போன்ற திறமையான நடிகைக்காக எந்த ஆபத்தையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக பீட்டர் ஹெய்ன் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்