Facebook இல் வெளியான புகைப்படத்தால் சர்ச்சைக்குள்ளாகிய ஆங் சான் சூ கி; மன்னிப்புக் கோரினார் பிரதியமைச்சர்

எழுத்தாளர் Staff Writer

10 Jun, 2014 | 12:02 pm

மியன்மார் அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் ஒருவர் ஜனநாயக செயற்பாட்டாளர் ஆங் சான் சூ கியிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

மியன்மார் தகவல்துறை பிரதியமைச்சர் Ye Htu, அவரது மனைவி Khin Shandar Tun, சூ கி இஸ்லாமிய பெண்களைப் போன்று ஹிஜாப் அணிந்திருக்கும் புகைப்படத்தை Facebook இல் வெளியிட்டார்.

இது உண்மையில் ஆங் சான் சூ கியின் புகைப்படமல்ல. இது போலியாக உருவாக்கப்பட்டு, Khin Shandar Tun இனினால் பேஸ்புக் பக்கத்தில் தரவேற்றப்பட்டிருந்தது.

இந்த புகைப்படத்தை பலரும் மீள பகிர்ந்ததால், பல சர்ச்சைகளை தோற்றுவித்தது. சூ கியிற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டன.

இந்நிலையில் தனது மனைவியின் செயலுக்காக Ye Htu மன்னிப்புக் கோரியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்