சிரச தொலைக்காட்சி தனது 16 ஆவது பிறந்த தினத்தை சிகிரியாவில் கொண்டாடியது (வீடியோ)

சிரச தொலைக்காட்சி தனது 16 ஆவது பிறந்த தினத்தை சிகிரியாவில் கொண்டாடியது (வீடியோ)

எழுத்தாளர் Bella Dalima

10 Jun, 2014 | 9:40 pm

இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் புதிய அனுபவங்களைப் பெற்றுக்கொண்டு தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தொடர்புகளை முன்னெடுக்கின்ற சிரச தொலைக்காட்சி இன்று (10) தனது 16 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடியது.

நாட்டின் இலத்திரனியல் ஊடகத்தின் புதிய பாதை ஒன்றை உருவாக்கி 1998 ஆம் ஆண்டு, இன்று போன்ற ஒரு நாளில் சிரச தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டது.

‘சிகிரிய சிரச’ என்ற தொனிப்பொருளில் சிரச தொலைக்காட்சி இன்று சீகிரியாவில் தனது 16 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடியது.

சிரச தொலைக்காட்சியின் 16 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டங்கள் சிகிரிய கிம்பிஸ்ஸ கனிஷ்ட வித்தியாலயத்தில் இன்று காலை ஆரம்பமாகின.

இந்தப் பாடசாலையில் இதுவரையும் தடைப்பட்டிருந்த குடிநீர் விநியோகம் திருத்தியமைத்துக் கொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வுகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து கண் சிகிச்சை முகாமொன்றும் இடம்பெற்றது.

இதேவேளை, சிகிரிய தென்னகோன் மாவத்தையில் உள்ள குறுக்கு வீதியான அஹலகல பகுதிக்குச் செல்லும் வீதி பிரதேச மக்களின் இணக்கத்துடன் திருத்தியமைக்கப்பட்டு சிரச மாவத்தையாகப் பெயரிடப்பட்டது.

இதற்கு பிரதேச சபையின் பூரண அனுமதியும் கிடைத்திருந்தது.

இந்த வீதி இன்று காலை சிரச மாவத்தை என்ற பெயரில் திறந்து வைக்கப்பட்டது.

அமைச்சர் ஜனக பண்டாரதென்னகோன்,  சிரச தொலைக்காட்சியின் அலைவரிசைப் பணிப்பாளர் மற்றும் எம்.ரீ.வி பணிப்பாளர் சந்தனசூரிய பண்டார ஆகியோரினால் சிரச மாவத்தை வீதி மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது நினைவுப் பலகையை வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் மற்றும் நியூஸ்பெஸ்ட் அலைவரிசைப் பணிப்பாளர் ஷெவான் டேனியல் திறந்து வைத்தார்.

சிரச மாவத்தை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து மூன்று மாதக் குழந்தை ஒன்றுக்கு புலமைப் பரிசில் ஒன்றும் வழங்கப்பட்டது.

சிரச ரி.வியின் பிறந்த நாள் நிகழ்வின் இன்னுமொரு  கட்டமாக சிகிரிய மகா வித்தியாலய நூலகத்திற்கு புத்தகங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.​

அதனைத் தொடர்ந்து சிரச தொலைக்காட்சியின் 16 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகின.

இந்த நிகழ்வுகள் சிகிரியப் பூங்கா வளாகத்தில் இடம்பெற்றன.

சிகிரியாவின் பல பாடசாலை மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்