வியட்நாம் தூதுவர் யாழ்ப்பாணத்தில் பல இடங்களுக்கு விஜயம்

வியட்நாம் தூதுவர் யாழ்ப்பாணத்தில் பல இடங்களுக்கு விஜயம்

வியட்நாம் தூதுவர் யாழ்ப்பாணத்தில் பல இடங்களுக்கு விஜயம்

எழுத்தாளர் Staff Writer

10 Jun, 2014 | 2:23 pm

யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் டொன்சின் தான்ங் இன்று முற்பகல் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு வடமாகாண ஆளுநரின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

இன்று காலை யாழ். பொதுநூலகத்திற்கு சென்று பார்வையிட்ட வியட்நாம் தூதுவர் ஒரு தொகுதி நூல்களையும் அன்பளிப்புச் செய்துள்ளார்.

நூலகத்தில் உள்ள புராதன ஓலைச் சுவடிகள் மற்றும் புராதன நிழற்படங்களையும் வியட்நாம் தூதுவர் பார்வையிட்டுள்ளார்.

இலங்கைக்கான வியட்நாம் துதுவர் டோன் சிங் தான்ங் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனையும் நேற்று சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

வட மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் நீர்வாழ் உயிரினங்கள் தொடர்பான வியட்நாம் தொழில்நுட்ப உதவித் திட்டத்தைப் பார்வையிடச் சென்றபோதே அவர் முதலமைச்சரை சந்தித்தார்.

வடமாகாணம் நீர்வாழ் உயிரினங்களை வளர்த்தெடுக்கும் தொழிலுக்கான மிகச் சிறந்த இடமாக காணப்பட்டதாகவும், இதன் காரணமாக மாவட்டத்தில் தொழில்நுட்பப் பயற்சிப் பாடங்களை கற்பித்து வருவதாக வியட்நாம் தூதுவர் சுட்டிக்காட்டியதாகவும் முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்