மீளத் திறக்கப்பட்டது கராச்சி விமான நிலையம்; பலியானோரின் எண்ணிக்கை 30ஆக அதிகரிப்பு

மீளத் திறக்கப்பட்டது கராச்சி விமான நிலையம்; பலியானோரின் எண்ணிக்கை 30ஆக அதிகரிப்பு

மீளத் திறக்கப்பட்டது கராச்சி விமான நிலையம்; பலியானோரின் எண்ணிக்கை 30ஆக அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Jun, 2014 | 12:52 pm

பாகிஸ்தானில் தலிபான்களின் தாக்குதலிற்கு பின்னர் கராச்சி விமான நிலையம் மீளத் திறக்கப்பட்டுள்ளது

இந்த தாக்குதல் தொடர்பில் தீவிர விசாரணை நடத்தப்படும் என பாகிஸ்தான்  அறிவித்துள்ளது.

இதேவேளை விமான நிலையத்தை மீட்பதற்காக போராடிய இராணுவத்தினருக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது வாழ்த்துக்களை தெரவித்துள்ளார்.

குறித்த தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இரண்டு சடலங்களை விமான நிலையத்தின் முனையத்தின் உள்ளே கண்டெடுத்ததாக பாகிஸ்தானின் சிவில் போக்குவரத்து ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.

தமது பிரதான தலைவர் ஒருவரின் மரணத்திற்கு பழிவாங்கும் வகையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தலிபான் அமைப்பு அறிவித்துள்ளது.

அப்பாவி கிராம மக்கள் மீது நடத்தப்படும் குண்டுத்தாக்குதல்களுக்ககு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாகவும் இதை மேற்கொணடதாக தலிபான் அமைப்பின் பேச்சாளர் ஷாஹிதுல்லாஹ் ஷாஹித் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த தாக்குதலை மேற்கொண்ட தலிபான் குழுவில்  வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் காணப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இது நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல் எனவும்  நன்கு பயிற்றப்பட்ட குழுவொன்றின் மூலமே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் சிந்து மாகாண முதலமைச்சர் கயீம் அலி ஷாஹ் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பாகிஸ்தானின் பெஷாவர் மற்றும் கிழக்கு வஸிரிஸ்தனில் உள்ள  பெரும்பாலான மக்கள் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அச்சத்தால் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரவிக்கின்றன.

இதேவேளை இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

விமான நிலையங்களில் விமானக் கடத்தல்களை முறிடிக்க வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்