மலையகத்தின் பல பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல்

மலையகத்தின் பல பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல்

மலையகத்தின் பல பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

10 Jun, 2014 | 2:09 pm

மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

நுவரெலியா, தலவாக்கலை, திம்புளை பத்தனை, வட்டவளை, பொகவந்தலாவை உள்ளிட்ட பகுதிகளில் பண மோசடி, திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் சந்தேகபர் தொடர்புட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

நீதிமன்றங்கள் பிறப்பித்திருந்த பிடியாணைகளுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கடந்த மாதம் 31 ஆம் திகதி வெள்ளவத்தையில் சந்தேகநபரை கைது செய்தனர்.

கல்கிசை நீதவான் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் இன்று முற்பகல் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

இதன்போது சந்தேகபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணைகளை இரத்து செய்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்