மயக்க மருந்து ஏற்றும் வைத்தியரை நியமிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

மயக்க மருந்து ஏற்றும் வைத்தியரை நியமிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

மயக்க மருந்து ஏற்றும் வைத்தியரை நியமிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

10 Jun, 2014 | 1:47 pm

கிண்ணியா தள வைத்தியசாலையில் மயக்க மருந்து ஏற்றும் வைத்தியர் ஒருவர் இல்லை எனத் தெரிவித்து, நோயாளர்கள் சிலர் இன்று முற்பகல் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதனால் தமது சத்திர சிகிச்சைகள் பிற்போடப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, கிண்ணியா வைத்தியசாலைக்கு தாமதமின்றி மயக்க மருந்து ஏற்றும் வைத்தியர் ஒருவரை நியமிக்குமாறு நோயாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் கிண்ணியா தள வைத்தியசாலையின் அத்தியட்சகரிடம் வினவியபோது, ஆளணி பற்றாக்குறை இருப்பதாகவும், அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்