பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்குதல்: போயா தினத்திற்கு முன்னர் உண்மை வெளியாகும் என்கிறார் பிரதி அமைச்சர்

பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்குதல்: போயா தினத்திற்கு முன்னர் உண்மை வெளியாகும் என்கிறார் பிரதி அமைச்சர்

எழுத்தாளர் Bella Dalima

10 Jun, 2014 | 7:57 pm

அதிவேக வீதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பிரதி அமைச்சர் ஹேமால் குணசேகரவிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது.

அந்த சம்பவம் இடம்பெற்ற விதம் தொடர்பில் பிரதியமைச்சர் நேற்று (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்தார்.

அவர் தெரிவித்ததாவது;

[quote]அவர் கராத்தேயில் கறுப்புப்பட்டி பெற்றவர் என எனக்கு அறியக்கிடைத்துள்ளது.  எனவே, அந்த விளையாட்டைப் போன்றே அவர் செயற்படுகின்றார்.  நான் வேண்டுமாயின் அதனைக் காண்பிக்கின்றேன்.  நீர் என்னுடைய இலக்கத்தைப் பார்த்துக்கொள்ளும். உங்களால் முடியுமான எதனை வேண்டுமாயினும் செய்யுமாறு என்னிடம் கூறினார்.  மனிதன் என்ற வகையில் எவருக்கும் தன்மானம் உள்ளது.  எந்தத் தவறை செய்தாலும் சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்துமாறே நானும் கூறுகின்றேன்.  நான் தவறிழைத்தால் நாளை என்னை கைது செய்யுங்கள்.  என்னைக் கைது செய்ய சபாநாயகரின் அனுமதி அவசியமில்லை. போயா தினத்திற்கு முன்னர் இதன் உண்மை வெளியாகும்.[/quote]

இதேவேளை, தாக்கப்பட்டதாகக் கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் தனது கருத்தைத் தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது;

[quote]கௌரவ அமைச்சர்  செய்தியாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து என்னைக் குறைகூறுகிறார்.  பொலிஸ் திணைக்களத்தில் ஓர் ஊடகப் பேச்சாளர் உள்ளார்.  அவருக்கு முன்னர் இவர் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவருக்கு வேண்டிய விதத்திலா இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணை இடம்பெறுகிறது என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுகின்றது.

அனைத்து விடயங்களுக்கும் முன்னர் அமைச்சர் எதனையாவது கூறுவார்.  தாக்குதல் மேற்கொண்ட ஒருவராவது இன்று அல்லது நாளை கைது செய்யப்படுவார் என  நானும் எதிர்பார்த்துள்ளேன். பிடிபடமாட்டார் என்பதில் இவருக்கு 100 வீத நம்பிக்கை உள்ளது.

பொலிஸ் திணைக்களம் சட்டப்பூர்வமாக இதற்கு சந்தர்ப்பம் வழங்கினால் என்னால் போக முடியுமான உயர் இடத்திற்கு சென்று நான் முறைப்பாடு செய்வேன்.  அவர் தற்போது எனது தனிப்பட்ட ஆவணங்கள் தொடர்பில் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றார்.

நான் கராத்தேயில் கறுப்புப்பட்டி பெற்றவன் என்று அவர் கூறுகிறார்.  எனது தனிப்பட்ட விடயங்கள் அதாவது எனது தனிப்பட்ட கோவைகளில் உள்ள விடயங்கள் தொடர்பில் கேள்வி எழுப்புகிறார். பொலிஸ் திணைக்களத்தில் உள்ள அதிகாரிகளால் என்னை விசாரணைக்கு உட்படுத்த முடியும்.  அமைச்சர்களால் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ள முடியாது.  எனவே, எனது விடயங்கள் தொடர்பில் அவர் விசாரணை மேற்கொள்வதிலும் எனக்கு சந்தேகம் உள்ளது.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்