‘தண்ணி’ போட்டால் மீனுக்கும் வேகம் பிறக்கும்!

‘தண்ணி’ போட்டால் மீனுக்கும் வேகம் பிறக்கும்!

‘தண்ணி’ போட்டால் மீனுக்கும் வேகம் பிறக்கும்!

எழுத்தாளர் Bella Dalima

10 Jun, 2014 | 10:27 pm

மது அருந்தினால் ‘குடிமகன்களுக்கு’ மட்டுமல்ல மீன்களுக்கும் வேகம் பிறக்கிறதாம்.

நியூயோர்க்கைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இத்தகவலை வௌியிட்டுள்ளனர்.

‘மதுவும், சமூக அகப்பண்புகளும்’ என்பது குறித்த ஆய்வை நடத்தியபோதே அவர்கள் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளனர்.
மீன்களில் வரிக்குதிரை மீன் என்றொரு இனம் உண்டு. விஞ்ஞானிகள் இந்த இன மீன் ஒன்றுக்கு மது கொடுத்து தண்ணீரில் நீந்த விட்டார்களாம். அப்போது, அந்த மீன் படுவேகமாக நீந்தத் தொடங்கியதாம்.

அது மட்டுமல்ல, அந்த மீனின் வேகத்தைப் பார்த்து ஏனைய மீன்களும் படுவேகமாக பின்தொடர்ந்து நீந்த ஆரம்பித்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் புதிய மருத்துவ சிகிச்சை முறைகளைக் கண்டறிய முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்