சத்தியாகிரகப் போராட்டம்  நிறைவு; அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவிப்பு

சத்தியாகிரகப் போராட்டம் நிறைவு; அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவிப்பு

சத்தியாகிரகப் போராட்டம் நிறைவு; அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Jun, 2014 | 1:58 pm

இணை சுகாதார விஞ்ஞான பட்டப்படிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய திருத்தங்கள் எழுத்து மூலம் பல்கலைக்கழகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

இதற்கமைய, பாடத்திட்டத்திற்கான புள்ளி 80 இலிருந்து 120 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்தத் தீர்மானம் எழுத்துமூலம் பல்கலைக்கழகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், 171 நாட்களாக நாடளாவிய ரீதியில் முன்னெடுத்த சத்தியாகிரகப் போராட்டத்தை நாளை நிறைவுசெய்வதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் நஜீத் இந்திக்க குறிப்பிட்டார்.

பாடத்திட்டத்தின் கால வரையறையை விடவும், அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களே முக்கியத்துவம் வாய்ந்தது என உயர் கல்வி பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்