குளவிக் கொட்டுக்கு இலக்கான 9 பேர் வைத்தியசாலையில் அனுமதி

குளவிக் கொட்டுக்கு இலக்கான 9 பேர் வைத்தியசாலையில் அனுமதி

குளவிக் கொட்டுக்கு இலக்கான 9 பேர் வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

10 Jun, 2014 | 2:03 pm

பொகவந்தலாவை மற்றும் நோர்வூட்டில் குளவிக்கொட்டுக்கு இலக்கான ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவை ச்செபல்டன் தோட்டத்தைச் சேர்ந்த சிலர் இன்று காலை குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இவர்களில் நால்வர் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மூன்று பெண்களும் அடங்குவதாக மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

இதனைத் தவிர குளவிக் கொட்டுக்கு இலக்கான மூவர் சிகிச்சைபெற்று சென்றுள்ளனர்.

இதேவேளை, நோர்வூட் பொலிஸ் பிரிவின் ரொக்வூட் தோட்டத்தில் தேயிலைக் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த சிலர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குளவிக் கொட்டுக்கு இலக்கான 02 பெண்கள் நேற்று மாலை டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்