காணாமற்போனோர் தொடர்பில் புதிதாக 212 முறைப்பாடுள்

காணாமற்போனோர் தொடர்பில் புதிதாக 212 முறைப்பாடுள்

காணாமற்போனோர் தொடர்பில் புதிதாக 212 முறைப்பாடுள்

எழுத்தாளர் Staff Writer

10 Jun, 2014 | 7:57 am

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்த இரண்டாம் கட்ட அமர்வில் புதிதாக 212  முறைப்பாடுகளை பதிவுசெய்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமற்போனோர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற 195 முறைப்பாடுகளுக்கான சாட்சி விசாரணைகள் இடம்பெற்றதாக காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச.டபிள்யூ.குணதாச தெரிவித்தார்.

இந்த அமர்வில் பதிவுசெய்யப்பட்ட சாட்சியங்களில் அதிகமானவை காத்தான்குடி – குருக்கள் மடத்தில் காணப்படுவதாக கூறப்படும் மனித புதைகுழி தொடர்பிலேயே முன்வைக்கப்பட்டுள்ளன.

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இரண்டாம் கட்ட சாட்சிப் பதிவுகள் கடந்த ஆறாம் திகதி காத்தான்குடி பிரதேச செயலகத்தில் ஆரம்பமானது.

மட்டக்களப்பில் நேற்றைய தினத்துடன் அமர்வுகளை நிறைவு செய்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் அடுத்த மாதம் ஆணைக்குழுவின் அமர்வுகள் இடம்பெறவுள்ளதாக அதன் செயலாளர் எச.டபிள்யூ.குணதாச தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்