கசிந்தது அஜித் – கௌதம் மேனன் படத்தின் கதை; விசாரணை ஆரம்பம்

கசிந்தது அஜித் – கௌதம் மேனன் படத்தின் கதை; விசாரணை ஆரம்பம்

கசிந்தது அஜித் – கௌதம் மேனன் படத்தின் கதை; விசாரணை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

10 Jun, 2014 | 10:59 am

அஜித் நடிக்க கௌதம் மேனன் இயக்கும் படத்தின் கதை இணைய தளத்தில் கசிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கதை
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் சென்று கொண்டிருக்கும் அஜித் மனைவி த்ரிஷாவை குண்டர் கும்பல் வழிமறித்து கொன்றுவிடுகிறார்களாம்.

பிணத்தை சாலையிலேயே போட்டுவிட்டு ஓடிவிட, அந்தக் கொலை தமிழகத்தையே பரபரப்பாக்குகிறது. கொலையாளிகளை கண்டுபிடிக்கும் பொறுப்பு காவல் துறை உயர் அதிகாரி அஜித்திடம் ஒப்படைக்கப்படுகிறது. அவருக்கு அனுஷ்கா உதவி செய்கிறார். இந்தக் கொலையின் பின்னணியில் பெரும் சதி இருப்பதும், பெரிய மனிதர்கள் பலர் இருப்பதும் தெரிய வருகிறது. எந்த நெருக்கடிக்கும் தலைவணங்காமல், அந்தப் பெரிய மனிதர்களை கூண்டிலேற்றுகிறாராம் அஜித்.

இதுதான் படத்தின் கதை என்கிறார்கள். விடயமறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்களாம் படக்குழுவினர். விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்