ஐ படத்திற்காக ஒரு கோடியில் சங்கர் உருவாக்கிய ‘சீன பூங்கா’

ஐ படத்திற்காக ஒரு கோடியில் சங்கர் உருவாக்கிய ‘சீன பூங்கா’

ஐ படத்திற்காக ஒரு கோடியில் சங்கர் உருவாக்கிய ‘சீன பூங்கா’

எழுத்தாளர் Staff Writer

10 Jun, 2014 | 1:01 pm

விக்ரம்  நடித்து கொண்டிருக்கும் ஐ படம் இந்த ஜூன் மாதம் 15 திகதிக்குள் வெளியாகும் என்ற செய்தி 2 மாதங்களுக்கு முன்பே வந்தது, ஆனால் படப்பிடிப்பே இன்னும் நிறைவடையவில்லை.

ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து சமீபத்தில் வெளிவந்த அணைத்து படங்களும் தோல்வியை தழுவிய நிலையில், இப்படத்தை வேறு ஒரு நிறுவனத்துக்கு கை மாற்றிவிடலாம் என்ற யோசனையில் உள்ளார்களாம்.

தற்போது வரை படத்தில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் சம்பள பாக்கி உள்ளது. இருந்தாலும் மனம் தளராத ரவிச்சந்திரன் எப்படியோ படத்தை நாங்களே முடித்துவிடுவோம் என்று தற்போது பொள்ளாச்சியில் சீனாவில் உள்ளது மாதிரியான பூங்காவை ‘செட்’ போட்டு படபிடிப்பை நடத்தவுள்ளனர்.

ஷங்கர் ஒன்றை நினைத்து விட்டால் அதை மாற்ற முடியாது, தற்போது இருக்கும் சூழ்நிலையில் சீனா சென்று சில காட்சிகள் எடுக்க முடியாது என்று தெரிந்து கொண்ட ஷங்கர், அதே பூங்காவை தானே உருவாக்க திட்டமிட்டார்.

அதற்காக இடம் தேடி வந்தவர் பொள்ளாச்சியில் ஒரு சில ஏக்கர்களில் ஒரு இடத்தை பிடித்தார். அந்த இடத்தில் சீனாவில் உள்ள பூங்காவில் என்னென்ன மரம் செடி கொடிகள் உள்ளதோ அது அத்தனையும் அங்கே வளர்க்கத் தொடங்கினார்.

அந்த பூங்காவை உருவாக்கவே கிட்டத்தட்ட ஒரு கோடி ஆனதாக சொல்கிறார்கள். இப்படி ஐ படத்தின் ஒவ்வொரு முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளுக்காகவும் நேரம் எடுத்து படமாக்கியிருக்கிறாராம் நம்ம பிரம்மாண்ட இயக்குனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்