இந்திய மக்களவையில் எதிர்கட்சிப் பதவி யாருக்கும் கிடையாது!

இந்திய மக்களவையில் எதிர்கட்சிப் பதவி யாருக்கும் கிடையாது!

இந்திய மக்களவையில் எதிர்கட்சிப் பதவி யாருக்கும் கிடையாது!

எழுத்தாளர் Bella Dalima

10 Jun, 2014 | 5:24 pm

இந்திய மக்களவையில் எதிர்கட்சித் தலைவர் பதவியைப் பெற எந்தக் கட்சிக்கும் போதிய உறுப்பினர்கள் இல்லாததைத் தொடர்ந்து அந்தப் பதவியைக் காலியாக வைத்திருக்க சபாநாயகர் சுமித்ரா மகாஜன் முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, முதன் முறையாக தனியொரு கட்சிக்கு பெரும்பான்மை பலத்தை மக்கள் கொடுத்துள்ளனர்.

அதேசமயம், எதிர்கட்சி வரிசையில் காங்கிரஸ் உட்பட எந்தக் கட்சிக்கும் மக்களவையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்தைப் பெறுவதற்குத் தேவையான பலத்தை மக்கள் தரவில்லை.

மக்களவையில் எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு உரிமை கோரும் கட்சிக்கு குறைந்தது 55 உறுப்பினர்கள் பலம் இருக்க வேண்டும். ஆனால், எதிர்க்கட்சி வரிசையில் மிகப்பெரிய கட்சியாக இருக்கும் காங்கிரசுக்கு 44 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இதனால், அந்தக் கட்சிக்கு எதிர்கட்சி தலைவர் பதவி கிடைக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்