அக்கரைப்பற்றில் விவசாயிகள் உண்ணாவிரதம்

அக்கரைப்பற்றில் விவசாயிகள் உண்ணாவிரதம்

எழுத்தாளர் Staff Writer

10 Jun, 2014 | 1:29 pm

அம்பாறை அக்கரைப்பற்று பகுதியில் விவசாயிகள் சிலர் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வட்டமேடு பகுதியில் தாம் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்த காணியில் இந்த வருடம் விவசாயம் மேற்கொள்வதற்கான அனுமதியை பாதுகாப்புத் தரப்பினர் நிராகரித்துள்ளதாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள விவசாயிகள் தெரிவித்தனர்.

நீண்டகாலமாக தாம் விவசாயம் மேற்கொண்டுவந்த காணியில் இம்முறையும் விவசாய நடவடிக்கையை மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அக்கரைப்பற்று விவசாயிகள் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரியவிடம் வினவியபோது, வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமான காட்டுப் பகுதி அழிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

ஆயிரக்கணக்கான ஏக்கர் காடு அழிக்கப்பட்டு பெறுமதிமிக்க மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் செய்த முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் குறித்த பகுதியை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பொலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு இராணுவத்தினரும் ஒத்துழைப்பை வழங்கி வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்