ரைகம் விருது வழங்கும் விழாவில் நியூஸ்பெஸ்ட்டுக்கு இரு விருதுகள்

ரைகம் விருது வழங்கும் விழாவில் நியூஸ்பெஸ்ட்டுக்கு இரு விருதுகள்

எழுத்தாளர் Staff Writer

07 Jun, 2014 | 9:45 am

ரைகம் விருது வழங்கும் விழாவில் நியூஸ்பெஸ்ட்டுக்கு இரண்டு விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

கம்மெத்த மற்றும் முகுனட்ட முகுன ஆகிய இரு நிகழ்ச்சிகளுக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

2005 ஆம் ஆரம்பிக்கப்பட்ட ரைகம் விருது வழங்கும் விழா 10 ஆவது முறையாக நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது சிரேஷ்ட அமைச்சர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க மற்றும் அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

பேராசிரியர் பெட்ரிக் ரத்நாயக்க தலைமையில் 5 பேர் அடங்கிய ஜூரி சபையினால் விருதுக்கான தெரிவுகள் இடம்பெற்றது.

ரைகம் விருது வழங்கும் விழாவில், நியூஸ் பெஸ்ட் தயாரிப்பான கம்மெத்த நிகழ்ச்சிக்கு சிறப்பு ஜூரி விருது வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர, கடந்த  வருடத்திற்கான சிறந்த அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கான ரைகம் விருதினை, நியூஸ் பெஸ்ட்டின் “முனட மூன” நிகழ்ச்சி பெற்றுக்கொண்டுள்ளது.

அத்துடன் டீ.விதெரண தொலைக்காட்சி மற்றும் ரூபவாஹிணி தொலைக்காட்சிகளுக்கும் விசேட விருதுகள் வழங்கப்பட்டன.

ஆண்டின் விளையாட்டு நிகழ்ச்சிக்கான விருது ஹிரு ரீ.விக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் ஆங்கிலசெய்திவாசிப்பாளருக்கான
விருது இந்தீவரி அமுவத்தவிற்கு வழங்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்