யுக்ரேனில் மோதல்களுக்கு மத்தியில் புதிய ஜனாதிபதி பதவியேற்கவுள்ளார்

யுக்ரேனில் மோதல்களுக்கு மத்தியில் புதிய ஜனாதிபதி பதவியேற்கவுள்ளார்

யுக்ரேனில் மோதல்களுக்கு மத்தியில் புதிய ஜனாதிபதி பதவியேற்கவுள்ளார்

எழுத்தாளர் Staff Writer

07 Jun, 2014 | 2:17 pm

யுக்ரேனில் பாரிய மோதல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்று புதிய ஜனாதிபதி தனது பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளவுள்ளார்.

ரஷ்ய தலையீட்டின் மத்தியிலும் கடந்த மாதம் 25 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பெட்ரோ பொரஷென்கோ வெற்றிப்பெற்றிருந்தார்..

யுக்ரேனின் 5 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள  பொரசென்கோவிற்கு உலகத் தலைவர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் இன்றைய பதவியேற்பு நிகழ்வில் சுமார் 15 வெளிநாட்டு இராஜதந்திரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

தனது பதவியேற்பிற்கு முன்னரே யுக்ரேன் விவகாரம் தொடர்பில் நேற்று ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்து பொரசென்கோ கலந்துரையாடியுள்ளார்.

யுக்ரேன் கிழக்கு பகுதியில் தொடரும் அமைதியின்மையை முடிவுக்கு கொண்டுவரும் பேச்சுவார்ததையை தொடர்வதற்கு  பொரசென்கோ விருப்பம் தெரிவித்துள்ளார்..

அத்துடன் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்துள்ள யுக்ரேனின் புதிய ஜனாதிபதி நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு மெற்குலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்