மீன் வகைகளுக்கு நிர்ணய விலை

மீன் வகைகளுக்கு நிர்ணய விலை

எழுத்தாளர் Staff Writer

07 Jun, 2014 | 5:21 pm

மீன் வகைகளுக்கு  நிர்ணய விலையை வழங்கும் முறைமையொன்றை தயாரிக்குமாறு கடற்றொழில் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.

மீனவர் சமூகம், கடற்றொழில் அமைச்சு மற்றும் திரைசேரியுடன் கலந்துரையாடி இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

மீன்களுக்கான நிர்ணய விலையை அறிமுகப்படுத்துவதன் மூலம் மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வினை காண முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கலந்துரையாடலின்போது கருத்து வெளியிட்ட கடற்றொழில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, ஒரு சில மீனவர்கள், மீன்பிடிப்பதற்காக டைனமைட்டை கடலில் வெடிக்கச் செய்வதாக தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை உடனடியாக பொலிஸ் மாஅதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்த ஜனாதிபதி, மீன்பிடிப்பதற்காக டைனமைட் பயன்படுத்தும் மீனவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்