மதுபான கடையை அகற்றுமாறு வலியுறுத்தி கொத்மலையில் ஆர்ப்பாட்டம்

மதுபான கடையை அகற்றுமாறு வலியுறுத்தி கொத்மலையில் ஆர்ப்பாட்டம்

மதுபான கடையை அகற்றுமாறு வலியுறுத்தி கொத்மலையில் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

07 Jun, 2014 | 2:52 pm

கொத்மலை தவலந்தன்னை கெரண்டிஎல பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கண்டி – நுவரெலியா பிரதான வீதியின் தவலந்தன்னை பகுதியில் அமைந்துள்ள கல்லு தவறணையை அங்கிருந்து அகற்றுமாறு கோரி நண்பகல் 12 மணி தொடக்கம் பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தவலந்தன்னை பகுதியில் காணப்படும் கல்லுத் தவறணையை, அண்மித்த பகுதியிலுள்ள மாணவர்களும், மக்களும் பெரிதும் பாதிக்கபடுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் நியூஸ்பெஸ்டுக்கு தெரிவிக்கின்றனர்.

தவலந்தன்னை பகுதியில் சுமார் 10 வருடங்களுக்கு முன்பாக கலால்வரி திணைக்களத்தினால் குறித்த கல்லுத் தவறணைக்கு அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் தவறணையை அண்மித்த பகுதியில் பாடசாலை, மத வழிப்பாட்டு தலங்கள் காணப்படுமாயின் அதற்கு ஏற்றவகையில் நடவடிக்கையை முன்னெடுப்பதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இதேவேளை, கண்டி நுவரெலியா பிரதான வீதியில் தவலந்தன்னை பகுதியில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தினால் போக்குவரத்துக்கு பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும், பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கொத்தமலை பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்