நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகலாம் என ஐ.நா அச்சம்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகலாம் என ஐ.நா அச்சம்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகலாம் என ஐ.நா அச்சம்

எழுத்தாளர் Staff Writer

07 Jun, 2014 | 4:15 pm

நைஜீரியாவில்  ஆயுததாரிகளால் கடத்தப்பட்ட 200 க்கும் அதிகமான பாடசாலை மாணவிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

ஏற்கனேவே மாணவிகளை விற்பனை செய்வதாக ஆயுததாரிகள் எச்சரித்துள்ள நிலையில் ஐ நாவின் இந்த அறிவிப்பும் பதற்றத்தை தோற்றுவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விடயம் தொடர்பில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள பாலியல் வன்கொடுமை தொடர்பிலான சர்வதேச மாநாட்டில் கலந்துரையாடவுள்ளதாக குறித்த விடயம் சார்ந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

நைஜீரியாவில் இதற்கு முன்னர் சுமார் இரண்டாயிரம் பெண்கள் கடத்தப்பட்டுள்ள போதிலும் பாடசாலை மாணவிகள் கடத்தப்பட்ட சம்பவமே உலகின் கவனத்தை ஈர்த்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்