நாடு முழுவதும் வயிற்றோட்டம் பரவக்கூடிய அபாயம்; சுகாதார அமைச்சு எச்சரிக்கை

நாடு முழுவதும் வயிற்றோட்டம் பரவக்கூடிய அபாயம்; சுகாதார அமைச்சு எச்சரிக்கை

நாடு முழுவதும் வயிற்றோட்டம் பரவக்கூடிய அபாயம்; சுகாதார அமைச்சு எச்சரிக்கை

எழுத்தாளர் Staff Writer

07 Jun, 2014 | 10:22 am

காய்ச்சல், இருமல், தடிமண் அறிகுறிகளுடன், நாடு முழுவதும் வயிற்றோட்டம் பரவக்கூடிய அபாயம் தோன்றியுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக சிறு பிள்ளைகளிடையே பரவலாக இந்த நோய்த் தன்மை பரவுகின்றமை பதிவாகியுள்ளதாக அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் வைத்திய நிபுணர் கபில ஜயரத்ன குறிப்பிடுகின்றார்.

குறிப்பிட்ட நோய் அறிகுறிகளுடன் காய்ச்சல் ஏற்படுமாயின் உடனடியாக அருகேயுள்ள வைத்தியர் ஒருவரை நாடி உரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

இந்த நோய்த் தன்மை ஏற்படுமாயின், புரதம் அடங்கிய போஷாக்குள்ள உணவு வகைகளையும், நீர் ஆகாரங்களையும் அதிகளவில் உட்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்