காணாமற்போனோர் தொடர்பில் மட்டக்களப்பில் இரண்டாவது நாளாகவும் சாட்சிப் பதிவு

காணாமற்போனோர் தொடர்பில் மட்டக்களப்பில் இரண்டாவது நாளாகவும் சாட்சிப் பதிவு

எழுத்தாளர் Staff Writer

07 Jun, 2014 | 7:36 pm

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் , மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இரண்டாம் கட்ட சாட்சிப் பதிவு இன்றும் நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற அமர்வின்போது 53  பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதாக    ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ. குணதாச தெரிவிக்கின்றார்.

இதுதவிர இன்றும் பலர் புதிதாக முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமர்வின்போது 49 பேர் சாட்சியமளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

குருக்கள் மடத்தில் 163 பேர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அநேகமானோர் இந்த இரண்டு தினங்களிலும் சாட்சியமளித்ததாக ஆணைக்குழுவின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

காணாமல்போனோர் தொடர்பான முறைபாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் நாளையும், நாளை மறுதினமும் மண்முனைபற்று பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்