காணாமற்போனோர்  தொடர்பில் மட்டக்களப்பில் இன்றும் சாட்சியப் பதிவு

காணாமற்போனோர் தொடர்பில் மட்டக்களப்பில் இன்றும் சாட்சியப் பதிவு

காணாமற்போனோர் தொடர்பில் மட்டக்களப்பில் இன்றும் சாட்சியப் பதிவு

எழுத்தாளர் Staff Writer

07 Jun, 2014 | 11:31 am

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சாட்சி விசாரணைகள் இராண்டாம் நாளாகவும் இன்று நடைபெறவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இரண்டாம் கட்ட சாட்சி விசாரணைகள் ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் நேற்று ஆரம்பமாகியிருந்தன.

இந்த அமர்வுகள் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இரண்டாம் நாளாக இன்றும் நடைபெறவுள்ளன.

ஆணைக்குழு முன் சாட்சியமளிப்பதற்காக நேற்று 59 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், 49 பேர் மாத்திரமே சமூகமளித்ததாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ. குணதாச தெரிவிக்கின்றார்.

இதுதவிர புதிதாக மேலும் 16 பேரின் முறைபாடுகள் நேற்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

குருக்கள் மடத்தில் 163 பேர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அநேகமானோர் முதல் நாள் அமர்வின்போது சாடசியமளித்ததாக ஆணைக்குழுவின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

காணாமல்போனோர் தொடர்பான முறைபாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் நாளையும், நாளை மறுதினமும் மண்முனைபற்று பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்