கருவலகஸ்வெவ பிரதேச சபையின் உபதலைவர் கைது

கருவலகஸ்வெவ பிரதேச சபையின் உபதலைவர் கைது

கருவலகஸ்வெவ பிரதேச சபையின் உபதலைவர் கைது

எழுத்தாளர் Staff Writer

07 Jun, 2014 | 9:34 am

கருவலகஸ்வெவ பிரதேச சபையின் உபதலைவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

மணல் ஏற்றிச்சென்ற ஒருவரை கைதுசெய்தபோது, பொலிஸாரின் கடமைகளுக்கு பிரதேச சபையின் உப தலைவர் இடையூறு விளைவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்டிருந்த சாரதியையும், கைப்பற்றட்ட உழவு இயந்திரத்தையும் கருவலகஸ்வெவ பிரதேச சபையின் உபதலைவர் பொலிஸாரிடம் இருந்து விடுவிக்க முற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பிரதேச சபையின் உபதலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண கூறினார்.

மணல் கடத்தல் நடவடிக்கையுடன் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்வதற்காக இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

பொலிஸார் மீதான தாக்குதல்கள் மற்றும் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தல் போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக கடும் சட்டநவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்