இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்குமாறு தமிழக மீனவர்கள் வலியுறுத்தல்

இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்குமாறு தமிழக மீனவர்கள் வலியுறுத்தல்

இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்குமாறு தமிழக மீனவர்கள் வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

07 Jun, 2014 | 6:55 pm

இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்குமாறு தமிழக மீனவர்கள் மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்து கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளதாக   தமிழக கடலோர விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட செயலாளர் பீ. ஜேசுராஜ் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

இந்திய கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் 12 பேர்  நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னைக்கு கிழக்கே 120 கடல் மைல்கள் தொலைவில் இரண்டு படகுகளுடன் இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் இலங்கை மீனவர்களால் பிடிக்கப்பட்டிருந்த 750 கிலோகிராம் மீன்  இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 73 இலங்கை மீனவர்கள் ஏற்கனவே தமிழகம் மற்றும் ஆந்திரா மாநிலங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மீனவர்களின் 15 படகுகளும் இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய மீனவர்கள் எவருமே தற்போது இலங்கையில் தடுப்புக் காவலில் வைக்கப்படவில்லை என்றும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் லால் டி சில்வா மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்