முறிகண்டியில் ரயில், ரிப்பர் மோதியதில் இருவர் காயம்

முறிகண்டியில் ரயில், ரிப்பர் மோதியதில் இருவர் காயம்

முறிகண்டியில் ரயில், ரிப்பர் மோதியதில் இருவர் காயம்

எழுத்தாளர் Staff Writer

04 Jun, 2014 | 3:04 pm

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – முறிகண்டி பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

மண் ஏற்றிச்சென்ற ரிப்பர் வாகனம், கொழும்பிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதில் ரிப்பர் வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்