மனைவியைக் கொலை செய்தவருக்கு 25 வருட சிறை; ஆட்டிறைச்சியை சமைக்க மறுத்ததால் நடந்த கொடூரம்

மனைவியைக் கொலை செய்தவருக்கு 25 வருட சிறை; ஆட்டிறைச்சியை சமைக்க மறுத்ததால் நடந்த கொடூரம்

மனைவியைக் கொலை செய்தவருக்கு 25 வருட சிறை; ஆட்டிறைச்சியை சமைக்க மறுத்ததால் நடந்த கொடூரம்

எழுத்தாளர் Staff Writer

04 Jun, 2014 | 1:13 pm

அமெரிக்காவில் வசிக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த நூர் ஹூசைன் (வயது 75) என்ற நபருக்கு மனைவியை கொலைச் செய்த குற்றச்சாட்டில் 25 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது மனைவியான (66 வயது) நாசர் ஹூசைனிடம் இரவு உணவிற்காக ஆட்டிறைச்சியினை சமைக்குமாறு கேட்டுள்ளார்நூர் ஹூசைன், இதற்கு மனைவி மறுப்பு தெரிவிக்க ஆத்திரமடைந்த ஹூசைன் இரும்புக் கம்பியலால் அவரைத் தாக்கியுள்ளார்.

தாக்குதலில் சம்பவ இடத்திலேயே நாசர் ஹூசைன் உயிரிழந்துள்ளார்.

சந்தேகத்தில் கைதான நூர் ஹுசைனின் குற்றம் நீரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு 25 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்